ஏதோ ஒரு தேடலில், இலக்கில்லாமல் செல்லும் இந்த பரபரப்பான வாழ்க்கையில் அனைவருக்கும் அவ்வப்பொழுது ஒரு சிறு இடைவேளை தேவைப்படுகிறது. பொதுவாக, அலுவலகம் செல்பவர்களாகட்டும், கட்டட வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களாகட்டும், யாராயினும் தவறாமல் எடுத்துக்கொள்வது தேநீர் இடைவேளை. ஒருவர், தனது வேலையில் எவ்வளவு பெரிய சிக்கலில் இருந்தாலும் “சார், வாங்க ஒரு டீ சாப்டு வந்து பாத்துக்கலாம்” என்று கூறி கேட்டிருப்பதுண்டு. இதற்கு காரணம், அந்த தேநீரின் ருசியோ அல்லது அங்கே போடப்படும் மசால் வடையின் மொறுமொறுப்போ அல்ல. அந்த சிறு இடைவேளை நமக்கு கொடுக்கும் ஆசுவாசம். அந்த நேரத்தில், நாம் அது வரை மறந்திருந்த மன்மோகன்சிங்கின் மௌனத்தைப் பற்றியோ அல்லது தெருமுனையில் த்ரிஷாவிற்கு கட்டப்பட்டிருக்கும் கோவிலைப்பற்றியோ பேசலாம், காற்று வாங்கலாம், வேறு என்னவேண்டுமானாலும் செய்யலாம், அப்படியே வீட்டிற்கு ஓடாமல் இருப்பதைத்தவிர. அதைப்போல, எனது வாழ்க்கையின் பரபரப்பிற்கிடையே, நான் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு தேநீர் இடைவேளைதான் இது. இங்கே பதியப்பட்டிருக்கும் ஒவ்வொன்றோடும் எல்லோரும் ஒத்துப்போவதென்பது சாத்தியப்படாதது; அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், படித்தபின் பிடித்திருந்தால், தட்டிக்கொடுக்கவோ, பெண்கள் என்றால் என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுக்கவோ தயங்கவேண்டாம். பிடிக்கவில்லையென்றாலும் முத்தம் கொடுக்கலாம், தப்பில்லை. எந்த ஒரு கலைஞனும், அவனின் கலைப் படைப்பும் இறுதியில் ஏங்கி நிற்பது ஒரு கைதட்டலுக்காகவே.
Saturday, 21 September 2013
இடைவேளையின் ஆரம்பம்

Subscribe to:
Post Comments (Atom)

Gud job bro
ReplyDelete