சூடான தேநீருடன்
மழை பெய்யும்
ஒரு ஞாயிறு மாலையை அனுபவிக்கவும்
அதிகாலை சூரியன்
அதன் சிறு உஷ்ணத்துடன்
துயிலெழுப்பவும்
சுவர்களுக்குள் மட்டுமே அகப்பட்ட வாழ்க்கையில்
முடிவில்லா அப் பரந்த வெளியை
அவ்வப்பொழுது பார்க்கவும்
மனிதக் குரல்கள்
அவன் கண்டுபிடித்த இயந்திரங்களின்
சப்தங்கள் தவிர
சிறுபொழுதேனும் குயில்களின் குரலைக்கேட்கவும்
சோம்பலுடன் கூடிய
இளம் குளிரான காலையில்
இந்தக் கவிதையை எழுதவும்
மாளிகைகள் வேண்டாம்
ஜன்னல் வைத்த
ஒரு சிறு அறை போதும் எனக்கு.

super bro....it's really nice and touching...keep writing.....
ReplyDelete